GOOD FRIDAY
புனித வெள்ளி! - 2020
முந்தைய பகுதிக்குச் செல்ல...!
Click Here
முகப்புக்குச் செல்ல..!
Click Here
மண்ணிலே பல மாமனிதர் பிறப்பதுண்டு!
திண்ணியமாய் மாந்தருக்கு வாழ்வியலைச் சொல்வதுண்டு!
கண்ணியமாய் அவர்வழியில் செல்வார்தம் மதமென்று,
எண்ணியே வாழ்வில் தனிப்பெருமை கொண்டு வாழ்வார்.
புண்ணியச்சீர் பெருமகனாம்
ஏசுபிரான்
மக்களுக்காய் உயிர் நீத்தார்!
மண்ணுலகில் மாந்தர்தாம் பெருவாழ்வு கொள்வார் என்றே!
அவர் வழியில் இறை தேடுவோர் அருள் பெறுவாராக!
-
கவிவளவன்
10-04-2020
புனித வெள்ளி - 2021
கனிவோடு காலமும் காலையும் பிறக்கட்டும்!
இனியேது துன்பமென்று இதயந்தான் மலரட்டும்!
நனிசீர் நாளென்று நவிலுவார் மக்களுந்தான்!
கனியவராய் இறையவனார் மகனார் தானும்
தனியராய் நிறைந்தே இன்னுயிர் நீத்த நாளாம்!
கனிவுடனே அவர் சொன்ன அன்பின் வழியில்,
அனைவருக்கும் வாழ்த்து!
அன்புடன்,
கு.ப. அசோகன் (02-04-2021)