ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள் (RAMZON)

ஈகைத்திருநாள் வாழ்த்து!(25-06-2017)

ஈகையே வாழ்வு என்றும்,
இறைவனின் கொடையே என்றும்,
ஏகமாய் சொன்னார் தூதர்,
ஏற்றவர் மனத்தில் கொண்டார்!
பகையிலா மாண்பினோடும்;
பசியெனும் உணர்வு கண்டும்,
தகைமையாய் நோன்பு கொண்டு,
கண்டிடும் பேருநாளில் வாழ்த்து!

 

ஈகைத்திருநாள் வாழ்த்து! (16-06-2018)

மானுடம் தழைந்து மனிதம் வாழ,
இறைவன் அனுப்பியத் தூதராம்
முகமது நபிகள்; அன்பின் வழியை
அழகாய்ச் சொல்லி, நோன்பின் வழியில்

இறைமை காட்டி, ஈகை என்பதும்
இறைவன் வழியென; யாவர்க்கும் உணர்த்த

*ஈகைத் திருநாள்* கொண்டாட வைத்தார்!

அவ்வருளார் வழியில், இறைமை தேடும்;

அனைத்து உள்ளங்களுக்கும்,

நெஞ்சார்ந்த *ஈகைத் திருநாள்* *வாழ்த்துக்கள்*

 

ஈகைத்திருநாள் வாழ்த்து!

மண்ணிலோர் வாழ்வைத் தந்து,
மகிழ்வுடன் வாழ்க வென்ற;
புண்ணியனார் இறையருளால்,
அறநெறி தந்தார் *நபி* யே!
மன்னிய அறங்கள் காத்து,
மகிழ்வுடன் வாழ்ந்திருப்போம்!
நன்னிய மனத்தால் நவிலுவேன்,
*ஈகைத் திருநாள்* வாழ்த்து!
- கவிவளவன் 05-06-2019

 

ஈகைத்திருநாள் Ramzon (2020) [25-05-2020]

 

ஈகைத் திருநாள் - Ramzon (2021)

 

ஈகைத் திருநாள் - Ramzon (2022)[03-05-2022]

 

ஈகைத் திருநாள் - Ramzon (2023)[22-04-2023]