முந்தைய பகுதிக்கு..!முகப்புக்கு...!

தியாகத் திருநாள் வாழ்த்துக்கள் (BAKRID)

தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்! 02-09-2017                               

நண்பர்கள் தினம் - 01-08-2021
நண்பர்கள் தினமெனவாய் பகிர்ந்தார் நானிலத்தில்!
நண்பரைக் காண்பதும் நலந்தனைக் கேட்பதும்
;
அலைபேசியோடு அமிழ்ந்து போக
; அச்சுறுத்தல்!
இலைமூடும் கனிபோலே இல்லத்தில் ஆழ்ந்திட்டோம்!

கலைமேவும் கற்பனையாய்
, தாங்கும் காலச்சுவடுகள்!
அலை ஓய்ந்து மறுபடியும் அடுத்த ஆண்டில் அணைத்திடுவோம்!
நினைவுகளோடு அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்து!- கவிவளவன்

அன்பின் வழியது உயிர்நிலை;
என்புதோல் போர்த்த உடம்பும் ஓர் நாள்,       
இயன்நிலை அழியும்!
மன்றினில் ஆடும் மானிடக்கூத்தும்;
இல்லாது போகும்!
இறையை அறிவீர்! இயன்நிலை தெளிவீர்!!
தியாகம் என்பதே இறையை அறிதல்!
மகமதுநபிக்கு மறையருள் புரிந்த,
இறையின் வழியில் அனைவருக்கும்
" *தியாகத் திருநாள் "* வாழ்த்துக்கள்!

தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்!

எண்ணிலாக் கனவுகள் இதயம் சுமந்திட,
மண்பதை போற்றும் மரபுகள் காத்து,
நன்னிய நட்புகள்
, நலம்பட வளர,
இன்னிய உலகில் இயைந்து வாழ,
மன்னிய உறவின் பெருமைகள் தேற
,
புண்ணிய மாந்தர் புலர்ந்து எழுந்திட
,
கண்ணியமாகத் தியாகத்தின் பொருளை
,
அழகுடன் உரைத்தார் அன்னல் நபி வழி! அனைவருக்கும் தியாகத் திருநாள் வாழ்த்து!
-      கவிவளவன் -13-09-2016 – 04.20 AM
*தியாகத் திருநாள் வாழ்த்து!*
வாழ்வியலின் அறம் சொல்லி
,
வகைவகையாய் வகுத்துச் சொல்லி
,
அருளாளர் தம் வழியே
,
இறைவன் காட்டிய இன்னொரு நெறியே
, 
*
தியாகத்திருநாள்!*
இஸ்லாமான நண்பர்கள் அனைவருக்கும்

 
*தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்!*
10-07-2022

மானுடமே உயர்வு என்று;
மானிடரே சொல்லி வைத்து,
மற்றவையும் தமதென்று,
மனங்கொண்டு வாழ்ந்திருக்க;
மண்ணில் நிறைவுயிர் யாவும்,
மருவிலா இறைவன் மட்சியென,
மானுடமே உணர்ந்து கொள்ள,
மறையாக நபிவழியே ஈந்தான்!
அனைவருக்கும்,
*தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்*

தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்!
நன்மையும் தீமையும் இறைவன் வைத்தது!

தன்னை உணரானைத் தன்னிலை அறியானை
,
தன்னிலைக் கண்டு நன்னிலை அடைய
,
மன்னக மாந்தர்க்கு இறையவன் அளித்த
,
மன்னிய விழாவாம்
தியாகத் திருநாள்
இன்றைய நாளில் நிறைந்தது கண்டோம்!
அன்னவன் இறையருள் அனைவரும் அடைக!

அனைவருக்கும்
தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்!!அன்புடன்,கவிவளவன் (01-08-2020)
     கவிவளவன் 12-08-2019