விடுதலை நாள் வாழ்த்துக்கள்
விடுதலைநாள் வாழ்த்து!(15-08-2017
விடுதலை நாள் வாழ்த்து!
15-08-2021
புண்ணியம் கொண்ட மண்ணில் பிறந்து,
கண்ணியம் மிக்க வழியில் வளர்ந்து;
திண்ணியராக வாழ்வை நகர்த்த,
எண்ணியே நாம் இருந்தோம் இல்லை!
அரசியல் என்னும் ஆணவக் கூத்து,
இரவல் கொண்ட அன்னிய மாண்புகள்!
கரங்கோத்து,
வாழ்வியல் சிதைக்க,
தரமும் கெட்டு,
தன்மையும் சிதைந்து!
இன்னியோர் வாழ்வில் இனிமை கூட்ட,
நன்னிய நாளாம் இதனில் உவந்தே,
மன்னிய மரபுகள் மருவின்றி காத்து,
நன்னிலைப் பெற்று,
நலமுடன் வாழ்வோம்!
15-08-2018 - விடுதலைநாள் வாழ்த்து
எழுபத்தி இரண்டாமாண்டு
இனியதாய் மலர்ந்ததின்று!
பழுதற்று துன்பம் நீங்கி,
பயனுற வாழ்தல் வேண்டி;
எழுந்திடும் எண்ணக் கூட்டில்,
இயன்நிலை பேணல் வேண்டும்!
அழுக்காறு நீங்கி வாழ்க வென்றே;
அன்புடன் *விடுதலைநாள்* வாழ்த்து!
--கவிவளவன்
(12.10 AM.)
விடுதலைநாள் வாழ்த்து 15-08-2019
வீணான
பழங்கதைகள் இனி வேண்டோம்!
பூணாகும் நல்வினைகள் இனி பகுப்போம்!
காணாத தீவினைகள் கண்டு வெதும்போம்!
மூளாது
புனைக்கதைகள் முகவரியை மாற்ற!
கேளாத நீதியென்று, இனியேதுமில்லை!
தாளாத தோல்விதனைச் சிதைப்போம்!
தகுதியினால் பெருமைகளைக் காப்போம்!
விகுதியாகும் வாழ்வியலின் கொற்றம்!
பகுத்துண்டு ஓம்புவோம்
*விடுதலைநாள் வாழ்த்து*
- கவிவளவன்
15-08-2019
விடுதலை நாள்
வாழ்த்து!
- 15-08-2020
# 73 ஆண்டுகளை எண்ணிக்
கடந்து விட்டோம்!
இன்னும் விடுதலையின்,
வேர்களில்,
வெந்நீர் குளங்கள்!
# நிழலும் இல்லை,
#
அன்றாடங்காய்ச்சிகளாய்,
அடுத்து நாட்களைப்,
பசியின்றிப் பார்ப்பதே
அவர்க்கு விடுதலை!
இன்னொரு பக்கம்;
மதமும் மொழியும்,
அரசியல்
களமாக,
ஆளுமைச் சிந்தையோடு,
இருபுறமும்,
புரிதல் இல்லா,
ஆரவாரங்கள்!
#
என்றும்,
ஆட்சியர் பின்னால்;
ஆளுமை செய்வது,
வணிகர் குலமே!
இன்றும், என்றும்,
உலகம் முழுமைக்கும்,
அது பொது
விதி!
அவர்தம் கருத்தியலே,
ஆட்சியர் கையில்,
சட்டமா அரங்கம் ஏறும்!
#
இன்னும்,
எம்நாட்டில்,
பலருக்கும்;
பசியினின்றும்,
விடுதலை வேண்டும்,
கல்வி
பெறவும்,
வழிவகை வேண்டும்!
#”வண்மையில்லை
ஓர்
வறுமை இன்மையால்”,
என்ற
கம்பனின்;
இராமன் பிறந்த தேசமாய்;
எங்கள்
இந்திய தேசம் முழுதும்,
திகழ்தல் வேண்டும்!
அன்றுதான்,
பிறப்பொக்கும்;
எல்லா உயிர்க்கும்!
-
கவிவளவன்