இன்னபிற வாழ்த்துக்கள்

 

முகரம்

சகோதரர் தினம்! -  24-05-2022
சக உத(தி)ரம் என்பதால்
, சகோதரம் ஆனதுவோ!
இகம்மீதில் பலவுமாய் இயம்பும் நிலையுண்டு!

தகைவுசால் அண்ணன் தம்பி எனும் நிலையதுவே!

யுகம் யுகமாய் இம்மண்ணில் பலகதையுண்டு!
 

அகம்புறமாய் அண்ணன் தம்பிமார் சீர்கொள்ள!

இராமனுக்கோர் இலக்குவணன்
, என்பது போல்,
இராவணனுக்கோர் தம்பி கும்ப கர்ணனாய்!
இதிகாசம் மகாபாரதம் தன்னில் பலகதைகள்! 

அதீதியாய் மாண்ட பின்னே மகனென்றாள்
;
அன்னையவள் குந்தியே கர்ணப் பிரபுதன்னை!

இளையவன் அரசாள்வான் என்றதைத் துடைத்த
,
இளங்கோவடிகளின் கதையும் எம்மண்ணில்!
 

இன்னுமோர் கதையதும் தமிழனின் நீதியாம்!

தன்னுயிர் மாய்த்து தலைதனை கொண்டு
,
உன் துயர் நீங்க தம்பியிடம் பரிசு கொள் என்ற,
மன்னவனாம் குமண வள்ளல் வாழ்ந்த மண்ணே!
 

அனைவருக்கும் இனிய சகோதரர் தின வாழ்த்து!

-     
கவிவளவன் 24-05-2022 (05.15 PM)


ஆண்டின் முதல் மாதம்,
ஆர்ப்பரித்த பத்தாம் நாள்,
தோன்றிய நிலைக் கலனில்
துயரான கதைகளுண்டு,
ஆன்றவன் இறைவனோடு,
அன்பினால் இயைந்த நெஞ்சம்,
மூண்டெழும் அன்பின் வழி,
முகிழ்ந்திருக்க வாழ்த்துவேனே!
- கவிவளவன் (11-09-2019 (9.50 AM)


ஓணம் வாழ்த்து 04-09-2017
அன்பின் வழியில்

ஆண்டவன் செயலில்,
இன்முகம் கோத்து,
ஈடில்லா புகழுடன்,
உலகம் உய்ய,
ஊக்கம் கொடுக்க,
எல்லா ஆண்டும்,
ஏற்றம் செய்யும்,
ஐந்தவப் பேற்றினன்,
ஒப்பிலா '
மாபலி '!
ஓணம் நாளில் வாழ்த்து!



சகோதரர்   தினம்!

சக உதிரம் பிறந்ததனால் சகோதரம் எனும் பாத்திரம்!

இகத்திலே வடமொழியின் பயன்பாட்டில் ஒரு தோத்திரம்!

அகத்திலே தமிழர்தாம் கொண்டநெறி அனைவருமே
,
தமக்கை
, தங்கை, தமையன், இளையன் எனவாய்!
சேமமுற வாழ்ந்திட்டார் யாவரும் ஒன்றெனவாய்!

ஓணம் வாழ்த்து
தென்னாட்டில் தவப்பயனாய்; தெள்ளுதமிழ்ச் சீர்விழுதாய்,
முன்னோர்க்கும்; மூத்தோர்க்கும்; முடிவிலா நெடுஞ்சரமாய்,
பண்பாட்டுச் சுவையறிய, பயின்றுவரும் திருவிழாவாம்!
மண்ணகத்தில் இவர்மட்டும் மருவின்றிச் செயல்படுவார்;
உண்மைக்கும்; உறுதிக்கும்; உயர்ந்த சீர் பண்புக்கும்,
ஆண்டின்சீர் ஆவணியில், முழுமதியாய்த் திருவோணம்,
முன்னிற்க, சிறப்பெய்தும் சீர்விழாவாம்; ஓணம்,

என்னினிய சேரநாட்டு மக்களுக்குச் செப்புவேன் வாழ்த்து!

 கவிவளவன் (11-09-2019 (10.00 AM )



நாமதனை நவின்றாலும் தவறில்லை நானிலத்தில்
,
தீமையின்றி அன்பெனும் அகல் விளக்காய் அன்பிட்டு!

அகத்தில் எனை அன்பிட்ட அக்காள்
, தங்கை, அண்ணன்,
செகம்நேர் தம்பிமார் யாவருக்கும் நன்றியுடன்;

யானுமே நவிலுவேன் நல்லதொரு வாழ்த்தே!
- கவிவளவன் 24-05-2020

அன்னையை வணங்கிடுவோம்!
ஆடிப்பூர மென்றார் அன்னையவள் தேவியவள்,
பாடிடத்தான் வருவாளோ! பார்க்கும் விழி அருளாக!
தேடித்ததான் பிடிப்போமோ தேன்விழியாள் திருவடியை!
வாடிநிற்காதீர் வண்ணமகள் அருளாலே நாளும் மகிழ்திடுவோம்!

- கவிவளவன் 23-07-2020 (4.05AM)

 

ஓணம் வாழ்த்து!
மாமன்னன் மாபலி யின் மருவிலா நினைவைப் போற்றும்,
தேமதுரத் தமிழ்ச் சேரர், சீரிய விழா கொள்ளும்;
ஓணம் திருநாள் இன்று, ஓங்காரப் பெருமைகொள்ள,
ஆனநாள் முதலாய் அவனே அன்புடன் வந்திடும்,
ஓணம் திருநாள் இதுவே, மலையகமாம் கேரளத்தின்,
பேணிடும் பெருநாள் என்போம்! ஆகலின் அன்னவர்க்கு,
ஆகிய தமிழின் உறவால், அன்புடன் வாழ்த்துச் சொல்வோம்!
-
கவிவளவன் 31-08-2020 (08.00 AM)  

*விவசாயிகள் தினம்!*
வேளாண் தினமென்று விருப்புடன் சொல்வீரோ!

களான்போல் பயிர்வளரக் கற்பனைக் கொள்வீரோ!

தாளாண்மை இருந்தாலே வேளாண் பணி தொடரும்!

தாளாதப் போராட்டம்  தயங்காத முன்னெடுப்பு!
 

சூல்கொண்டு நெல்விளைந்து சுகமான அறுவடைக்குள்,
வேல்கொண்டு வினையாற்றும் வேதனையாய் துயர்பெருகும்!
தாள்தாங்கும் நெல்மணிகள் தரமாக தன் இல்லம் வர
,
சூல் கொண்ட மகளைப்போல்
, பயிர்தனையும் தாங்கிடுவர்! 

காலம்பலவாக கண்டுவந்த அருட்பணியாம் வேளாண்மை!
கோலம் கலைந்ததுவாய் கேடுற்று நிற்குதையோ!
சீலமாய் அரசும்தான் செவிமடுக்கும் நிலையில்லை!

மூலமாய் வாழ்க்கைக்கு வேண்டாவோ உணவுந்தான்
? 

வேளாளன்தான் விருந்திருக்க உண்ணாதான்! இன்றோ
,
தாளாளன் ஆவானோ உணவின்றித் தடுமாறிச் சாவானோ?
வேளாண்மை அறமென்போம்
; விருந்தியலும் நிலையென்போம்!
மூளாதோ பசிதுன்பம்
? கணினியோ காட்டும் விடை? 

உற்பத்தி செய்துவிட்டு, ஊர்முழுதும் கடனாகி,
உற்பத்தி பொருளுக்கும் ஒவ்வாத விலைகொண்டு
,
தோற்றதாய் நிலைகொண்டு தெருவில் அலைகின்றார்!

அற்புதமாம் வேளாண்மை அடுத்து ஒழித்து விட்டு
, 

கற்பனையாய் நகர்புரமே கடுகி வருகின்றார்!
உற்பத்தி விலையானால் ஊர்முழுதும் சோறிடுவார்!

கற்பனை இல்லை உண்மை சொல்வேன் ஒருநாள்
;
*கார்ப்பரேட்டுகள்* வசமாகும் வேளாண்மை தானும்!
 

அரிசிவிலை உயரும் அடுத்து பட்டிணிப் பஞ்சம் வரும்!
அரிதான நம்கலைகள் அழிந்தேதான் போகும்!

புரிந்து கொள்வீரே புறப்பட்டுச் சொல்வீரே!

அரியதாம் வேளாண்மை அடுத்துக் காத்திடுவோம்!

-     
*கவிவளவன்* 23-12-2022 (04.30 பி.எம்.)