இல்லத்தில் இருந்திடு

பாப்பா - அதை

இன்பமாய் எண்ணிடு

பாப்பா.

பொல்லாத நுண்மிதான்

பாப்பா - நம்

புவிதனில் சுற்றுதே 

பாப்பா.

 

மூக்கினை மூடிடு

பாப்பா - தூய

மூச்சினை இழுத்திடு

பாப்பா

நாக்கு வாயினை

பாப்பா - அதை

நன்றாக மறைத்திடு

பாப்பா.

 

தொட்டுப் பேசாதே

பாப்பா - கொடும்

தொற்றினைத் துரத்திடு

பாப்பா.

எட்டியே நின்றிடு

பாப்பா - நோய்

ஒட்டலைத் தடுத்திடு

பாப்பா.

 

கையினைக் கழுவிடு

பாப்பா - அதைக்

காலமும் கடைபிடி

பாப்பா.

மெய்தனைக் காத்திடு

பாப்பா - அதன்

மேன்மையை உணர்ந்திடு

பாப்பா .

 

 வீதியில் சுற்றாதே

பாப்பா - கொடும்

நோய்வந்து தாக்கிடும்

பாப்பா.

போதிய உணவினைப்

பாப்பா – நீ

பொழுதுமே உண்டிடு

பாப்பா.

 

பொதிகை மு.செல்வராசன்

06/06/2021

 

 

பேரூவகை கொடுக்குமன்றோ! - பொதிகை மு.செல்வராசன்

 

1.பொதிகை மு.செல்வராசன்

 

 

திருமதி இரமா அனந்தாழ்வார் கவிதைகள் 
கடலழகு - நீரை அத்திப்பூ