கோ.பா. உன்னிக்கிருஷ்ணன் கவிதைகள்..!

குடி மகன்!

குடியால் நலிந்தது,
என் உடல் நலம்;
அதனால் அழிந்தது,
என் குடும்ப நலம்!

ஆனால்,
நாட்டில் பொருளாதாரம்;
இதனால் உயர்கிறதாம்!
 
"நாடுயுர குடி உயரும்!"

அப்படியானால்,
நாடுயர குடிக்கும் நான் தானே,
உண்மையான குடிமகன்!?