மனமார்ந்த வாழ்த்து!

தமிழின் பெருமை தகைந்து சூடிட,

அமிழ்தாய் பலரும் அருந்தவம் செய்ய,

பொருந்தும் வகையில் புதுப்புது முயற்சி!

 

நிகண்டு எனவாய் நீந்திய காலமும்,

சொல்லைத் தொகுத்த நிலையும்,

அல்லவை சிலவும் அடுத்து நிகழ்த்தி,

 

மணிப்பிறவாளம் என்றோர் மடமை சூடி,

அணியாய் தமிழின் அழகையும் சிதைத்து,

துணையாய், கிளைமொழி கிளர்ந்து எழவும்,

 

விக்குருதி என்னும் வினையைச் செய்து,

விருப்பாய் தமிழும் கீழ்மை அடைய,

விளக்கிய அறிஞர் தமிழின் தண்மையை,

 

விக்குருதி என்னும் நிலையை நீக்கி,

விளக்கம் பலவும் தந்த பின்னால்,

வடமொழி கலப்பு வகையாய் அறிந்தோம்!

 

அயற்சொல் தனக்கு அகர முதலியை,

அழகாய்ச் செய்தார் நெல்லை சித்திக்!

நூலின் பெருமையை நுகர்ந்து போற்றுவோம்!

 

அழகாய் கார்த்திகேயன் தலைமை ஏற்க,

நூலை வெளியிடும் நேரிய காலம்,

அச்சுக் கோவை அழகுடன் செய்த

 

அன்பின்சீர் சந்தியா நடராஜனுக்கும்,

விழாவைச் சுமக்கும் அன்பர் தமக்கும்,

விருப்புடன் நிறைந்து கூறும் வாழ்த்து!

அன்புடன்,

கவிவளவன்,

06-08-2023 (காலை 11-45)