தேமதுரத் தமிழ் போலே,
திகழும் அந்த ஒளி போலே,
சேமமுற மகன் பிறந்தான்! செம்மையாக
பிரத்திக்
ஆனானன்! தாமவனும் தரணியிலே பலபுகழும் கொண்டு,
கோனாகி வாழ்வானே நிறைந்து! பெயரனவன் பெருமையுடன் வாழ,
பொன் மனத்தால்
பெருந்தகை
திரு
கி.வெற்றிவேல்
அவர்களுக்கு
செல்வி தாரிணிக்கு
வாழ்த்து!
வாழ்த்துவோமே மகிழ்ந்து!
26-10-2021
தனி
வாழ்த்துக்கள்....!
ப.அன்பழகனுக்கு!
நன்னியத் தமிழைக் கண்டேன்,
நானிலம் போற்ற வுவந்தேன்!
பின்னிய மொழியின் வளமை,
பேரின்பம் கொள்ளச் செய்ய,
இன்னுமோர் பெருமை நம்மில்,
இனியதாம் தமிழைச் சூட
மன்னிய அறங்களோடு
மருவிலாத் தம்பி மார்கள்!
ஆதியில் யாரோ ஒருவன்
அழகுடன் வாழ்ந்தி ருக்க,
நீதியாய் நம்முள்ளே யும்தமிழ்
நீந்திடக் கண்டோம் இன்று!
தீதிலா கவிதை நீயும்
திடமுடன் செய்து வருக
சூதிலா அன்பால் உன்னை
சாமியும் அணைத்தே கொள்வான்!.
*அன்பு*
வுக்கு,
அன்புடன். 12-02-2020
*சிந்தையை நிறைக்கும் சந்திர சேகரா!*
பேரவைத் தலைவா! பெரும்புகழ் மனிதா!பார்வேர்டு
நேசா, பார்ப்பவையாவும்;
பார்க்காமல் அனுப்ப; பலவாய்க்குழுவை,
ஒரே பெயரில் வைத்த, ஒப்பிலா மணியே!
அரும்சேவை அளிக்கும்*சந்திரசேகரா*
உருபெறும் கேள்வன் *செந்தில்
குமார்*
அருசுவை நண்பனாய் அணைத்துக்கொள்ள,
இருகரம் கொண்டு ஏந்திய
*ராஜசேகர்*
மூவருமாகப் போர்முனைப் பணியாய்,
உறவுகள் சேர்க்கும் உன்னதப் பணியில்!நாளும்பொழுதும்
கந்தர்ஷட்டியுடன்,
காலையும் மாலையும் பலப்பல தகவல்!
வேலையாய் நிறைத்து வியப்புறச்
செய்வீர்!மூலைமுடுக்காய்,
ஒவ்வொரு நிலையிலும்,
ஆலையின் கரும்பாய் அவதியில் நாங்கள்!ஆலவாய்
ஈசனேக் காப்பாய் நிறைந்து!
-
கவிவளவன் 27-04-2020
*உடுமலைப்
பேட்டை!*
உடுமலை என்றது
நினைவில் வரும்,
உடலை வருடும்
நறுங் காற்றேதான்!அடமாய் வந்தே நம்மை ஆர்பரிக்கும்,
கடலாம்
*நாராயணக் கவி*
தானே!
தடமாய்
நிறைந்த இயற்கை வளம்!வடமாய்ச்
சுற்றிலும் மலைகளுண்டு!விடையாய்
அருகே அணைகளுண்டு!படமாய் மனதில்
பதிந்து கொள்ள,
திடந்தோள்
நண்பன் *தாஹிர் பாஷா*
அடுத்து
உறவினால்,
*இராஜ சேகரே!*
---- 0 ----
திண்ணமுற அன்பிலே தோய்ந்து விளையாட
கண்ணனென வந்துதித்தான் பிள்ளை அவனிசீர்,
தெள்ளமுதாய்த் ஆதிஸ்ரே யாவின் அமுதென,
தெள்ளமுதாய் வாழ்க நிறைந்து!
அன்புடன்,
கு.ப. அசோகன், 02-08-2021
இவரைத் தெரியுமா?
தீதிலா மொழிகள் கேட்டால்,
திகழ்ந்திடும் இன்பம் என்றே;
ஆதிநாள் தொட்டு தமிழர்,
ஆன்ற வழியாய்ச் சொல்வர்!
நீதியாய் மனதி லேற்றி,
நெடுந்துயர் தீரும் வழியாய்;
ஓதிய நெறியில் நாளும்
உவந்திடும் சேகர்
வாழியவே!
---- கவிவளவன் 27-05-2020